அச்சு அசலாக வனிதா போல இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா ? யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க.

0
689
ramesh
- Advertisement -

வனிதாவைப் போல அச்சசலாக பெண் வேடம் அணிந்து இருக்கும் பிரபல நடிகரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ரமேஷ் அரவிந்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொகுப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். தமிழில் 1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும் ‘ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரமேஷ் அரவிந்த்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் உன்னால் முடியும் தம்பி, பெண்மணி அவள் கண்மணி, கேளடி கண்மணி, வசந்தகால பறவை, இதய வாசல், மகாராசன், டூயட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னட மொழியிலும் பிரபலமான நடிகர் ஆவார். இவர் உலகநாயகன் கமலஹாசனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

- Advertisement -

ரமேஷ் அரவிந்த் திரைப்பயணம்:

கமலஹாசனும் இவரும் இணைந்து அவ்வை ஷண்முகி, சதிலீலாவதி, பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கமலின் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் என்ற படத்தையும் ரமேஷ் அரவிந்த் தான் இயக்கியிருந்தார். மேலும், இவரால் தமிழ் சினிமா துறையில் ஒரு முன்னணி நடிகராக வலம்வர முடியவில்லை என்றாலும் கன்னட திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து கன்னட சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி இருக்கிறார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம்:

தற்போது நடிகர் ரமேஷ் அரவிந்த் இந்தியில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் “குயின்”. காமெடி ட்ராமா படமான இந்த படத்தை அவர் ரீமேக் செய்து வருகிறார் . “பாரிஸ் பாரிஸ்” என்று தமிழில் ரீ மேக் செய்து வருகிறார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரமேஷ் அரவிந்த் பெண் வேடம் அணிந்து இருக்கும் புகைபடம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பெண் வேடம் அணிந்த நடிகர்:

சமீபத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த் அவர்கள் தனது இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் வேடத்தில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். கடந்த 1997 ஆம் கன்னடத்தில் வெளியான ஒரு படத்தில் நடிகர் ரமேஷ் அரவித்ந் பெண் வேடமிட்டு நடித்திருந்தார். அந்த படத்தின் போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் புகைப்படம்:

பல வருடங்கள் கழித்து தற்போது அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரமேஷ் அரவிந்த் பதிவிட்டு இருக்கிறார். அதில் பார்ப்பதற்கு அவர் அப்படியே வத்திக்குச்சி வனிதாவைப் போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், அந்த புகைப்படத்தை ட்ரெண்டிங் ஆக்கியும் வருகிறார்கள்.

Advertisement