தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ரமேஷ் கண்ணாவும் ஒருவர். இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் துணை இயக்குனரும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களிடம் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகனாக சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் காமெடி வில்லனாக நடித்த பஞ்சதந்திரம் படமும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. 2002 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பஞ்சதந்திரம். இந்த படத்தில் கமலஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் நடிகர் ரமேஷ் கண்ணா அவர்கள் இந்த படத்தில் நிகழ்ந்த சில அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, இந்தப் படத்தில் எனக்கு சண்டை காட்சியும் இருந்தது. காமெடி ஆக்டர் ஹீரோகூட சண்டை பண்ணது இந்தப் படத்துல் தான். எனக்கு ஃபைட் வராது என்று தயங்கினேன். அதற்கு கமல் சார் நீங்க முதுகில் படுங்க.

மத்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன் என்று சொன்னார். முட்டிக்கு Knee Cap எல்லாம் போட்டுட்டுப் போனேன். நானும் ஆக்‌ஷன் என்று சொன்னவுடனே கமல் சார் முதுகில் படுத்தேன். டக்குனு என்னை தூக்கிப்போட்டு பல்ட்டி அடிச்சிட்டார். அந்த காட்சி நல்லாவந்திருந்தது. இப்போது கூட ‘பஞ்சதந்திரம்’ படத்தை டிவியில் போட்டால் 10 பேராவது எனக்கு போன் பண்ணிடுவாங்க என்று கூறினார்.

Advertisement
Advertisement