விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 76 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயம் இல்லாத நபர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் ரம்யா ஜோ. இவர் ஊர் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுபவர். இவருடைய நடன வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரல். அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய இமேஜை மாற்ற வேண்டும் என்று கலந்து கொண்டிருந்தார்.
பிக் பாஸ் 9:
இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரம்யா ஜோ சண்ட கோழியாக எல்லோரிடமும் சண்டைக்கு சென்றார். அதற்குப்பின் இவர் அன்பு கேங்குடன் சேர்ந்து கொண்டு ஆள் அட்ரஸ் தெரியாமல் போனார். இவர் இரண்டு மூன்று வாரங்களிலேயே வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் இத்தனை வாரங்களாக இவர் பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்திருந்தது பெரிய விஷயம் தான் என்று கூறப்படுகிறது. இவர் எலிமினேட் ஆகுவதற்கு முந்தைய வாரம் தான் வீட்டு தல ஆகியிருந்தார். கடந்த வாரம் ரம்யா வீட்டு தலயாக இருந்து பொறுப்பாக வேலை செய்யாததால் விஜய் சேதுபதி வறுத்தெடுத்திருந்தார்.
View this post on Instagram
ரம்யா ஜோ நடனம்:
இதனால் கோபப்பட்ட ரம்யா தானாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக கூறியிருந்தார். பின் விஜய் சேதுபதி வெளியே போக சொன்னார். இருந்தாலும் மற்ற போட்டியாளர்கள் ரம்யாவை மீண்டும் தொடர சொன்னார்கள். பின் அடுத்த வாரமே இவர் எலுமினேட் ஆகி வெளியே வந்திருந்தார். பின் இவர் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் தன்னுடைய ஆடல் பாடல் வேலையை தொடங்கி இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் என்ற ஊரின் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தான் ரம்யா கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து
குத்தாட்டம் போட்டிருந்தார்.
https://www.youtube.com/shorts/R1n5ftsGEoY
ரம்யா ஜோ விளக்கம்:
மேலும், இவருடைய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் ஏன்? எண்ணானது?
எதற்கு இந்த வேலை என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்? இந்நிலையில் இது தொடர்பாக
பேசிய ரம்யா ஜோ, எனக்கு பணத்தேவை இருக்கிறது. 100 ரூபாய் யார் கொடுப்பார். வாடகை, இஎம்ஐ, கட்டணம் செலவுக்கு காசு வேண்டும். அதனால் தான் ஆடுகிறேன். பிக் பாஸ் முடித்து சம்பளம் கையில் கிடைக்க இன்னும் லேட் ஆகும். அதனால்தான் மீண்டும் ஆட வந்தேன் என்று கூறியிருக்கிறார்.






