ரம்யா நம்பிசனா இப்படி ஒரு கோலத்தில் - ரசிகர்களை வியக்க வைத்த போட்டோ ஷூட்.

By Rajkumar · 5/12/2021

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே நயன்தாரா பணியாற்றிய அதே கைரலி என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹலோ குட் ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக விளங்கி வந்த ரம்யா நம்பீசன் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம்,பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி உள்ளார்.

இதையும் பாருங்க : வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் - செல்வராகவன் பதிவை கேலி செய்யும் நெடிசன்கள்

அதில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்தும் வருகிறார். தற்போது நடிகை ரம்யா நபீசன், ரியோ ராஜ் கதநாகனாக நடித்து வரும் ‘பிளான் பண்ணி பண்ணனும் ‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தினை பத்ரி வெங்கடேஷ் என்பவர் இயக்கவிருக்கிறார் இவர் ஏற்கனவே அதர்வா நடித்த பானா காத்தாடி, செம போதை ஆகாதே போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், ரோபோ ஷங்கர், முனிஸ்காந்த், ஆடுகளம் நரேன் போன்ற பலரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இவர் இதுவரை திரைப்படங்களில் கூட கவர்ச்சியாக நடித்ததில்லை இந்த நிலையில் அவர் ட்ரான்ஸ்பரன்ட் ஜாக்கெட் வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full