இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரே. அப்படியே இருக்காங்க.

0
10783
ramya pandian
- Advertisement -

ஜோக்கர் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின எனவும் சொல்லலாம். இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Ramya-Pandian

மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இதையும் பாருங்க : பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காக்கிய பிகில் பட நடிகை.

- Advertisement -

மேலும், ரம்யா பாண்டியனின் நடிப்பு எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தால் கூட திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் எப்போதுமே குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் தேடித் தேடி நடித்து உள்ளார். இந்நிலையில் அவருக்கு புதியதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அண்மைக் காலத்தில் போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வந்தார். இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் அவர்கள் நேர்த்தியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து ரம்யா பாண்டியன் அவர்கள் சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடவும் தொடங்கினார்.

Ramya-Pandian
Ramya-Pandian

-விளம்பரம்-

எப்போதுமே ரம்யா பாண்டியன் அவர்கள் ஜீன்ஸ், சுடிதார் போட்டு தான் புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால், தற்போது புடவையில் இடுப்பு தெரியும் படி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த போட்டோ ஷூட் களின் மூலம் இளசுகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் அவருடைய புகைப்படங்களை வைத்து மீம்ஸ் போட்டு வந்தார்கள். அதோடு பொதுவாகவே திரைப்படங்களில் பிரபலமாகாத ரம்யா பாண்டியன் இந்த கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் பயங்கரமாக பிரபலமாகி விட்டார் என்று கூட சொல்லலாம். மேலும் இப்படி கவர்ச்சி புகைப்படங்களை போட்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பதால் பலரின் பாராட்டுகளைப் பெற்று வந்தார். அதற்கு பிறகு தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் வேற லெவல்ல இருக்காருன்னு சொல்லலாம். தற்போது தன்னுடைய குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையங்களில் பரவியது. மேலும், அந்த புகைப்படத்தில் தனது தாய், சகோதரன், சகோதரி ஆகியோர் இருந்தார்கள். மேலும், அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு அழகான தங்கையா! என ஆச்சரியத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

Advertisement