smoking ரூமின் ரகசியம்.! இதுக்குதான் எல்லாரும் அங்க போறாங்க.! ரம்யா அதிர்ச்சி பேட்டி

0
1323
Ramya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மமதி மற்றும் அனந்த் வைத்யநாதனுக்கு பிறகு வெளியேற்றபட்ட நித்யா மற்றும் ரம்யாவின் எலிமினேஷன் மக்கள் ஏற்றுகொள்ளவில்லை. அதிலும் சென்று வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபடுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரம்யா வெளியேற்றபட்டது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

NSK-Ramya-Bigg-Boss-House

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ரம்யா பல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வரும் ரம்யா, சமீபித்தல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் அறை குறித்த ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

பல்வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறையிளும் ஸ்மோக்கிங் ரூம் எனப்படும் புகைபிடிக்கும் அறையில் மட்டும் தான் காமரா கிடையாது என்று நினைத்து வருகிறோம்.ஆனால்,ஸ்மோக்கிங் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று ரம்யா தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா’அந்த ரூமிலும்(ஸ்மோக்கிங் ரூம்) கேமிரா இருக்கிறது. மேலும் அந்த ரூமிற்கு வெளியே அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களால் கூட எங்களை பார்க்க முடியும். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரை மட்டுமே உள்ளது. அந்த திரை சில நேரங்களில் காற்றில் கொஞ்சம் விலகும் போது அந்த வழியாக செல்வோரை, நாங்கள் பார்த்து கலாய்ததும் உண்டு’ என்று கூறியுள்ளார்.

Ramya

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், போட்டியாளர்கள் வெளியுலகை தொடர்புகொள்ள எவ்வளவு எளிதான வழி இருக்கிறது என்பது ரம்யா கூறியதிலிருந்து புலப்படிக்கிறது. மேலும்,ஸ்மோக்கிங் ரூம் புகைபிடிக்க செல்லும் நபர்கள் யார் என்பதை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டுவது இல்லை.அப்படி இருக்க அந்த அறையில் கேமரா எதற்கு என்ற சந்தேகம் எழுகிறது.ஒருவேளை அதனை காண்பித்தாள் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு சர்ச்சைகள் எழும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

Advertisement