படத்துல வெறும் மட்டம் தட்றதுக்காகவே ஒரு கேரக்டர் - ஜெய் பீம் குறித்து புதிய சர்ச்சையை கிளப்பிய ரங்கராஜ் பாண்டே.

By Rajkumar · 11/11/2021

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில்நடித்து இருந்தார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

https://twitter.com/chettyrajubhai/status/1458367965221429252

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

இதையும் பாருங்க : திடீர் திருமணம் முடித்த செம்பருத்தி சீரியல் ஷபானா, பாக்கியலட்சுமி ஆர்யன் - வைரலாகும் திருமண வீடியோ இதோ.

அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த 'குருமூர்த்தி' என்ற கதாபாத்திரத்தின் பெயர் அவரது வீட்டில் இருக்கும் காலண்டரில் காட்சிப்படுத்தப்பட்ட அக்னி குண்டம் படம் போன்ற பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது.

இதனால் காலண்டரில் லட்சுமி தேவி புகைப்படத்தை போட்டு படத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஐயர் கதாபாத்திரம் மட்டம் தட்டப்படுத்தப்பட்டதாக புதிய குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் ரங்கராஜ் பாண்டே. இந்த படத்தில் வந்த எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரம் தேவையே இல்லாமல் வைக்கப்பட்டு அந்த சமூகத்தினர் எதோ சுய நலமான சமூகம் என்பது போல படத்தில் காட்டப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full