திடீர் திருமணம் முடித்த செம்பருத்தி சீரியல் ஷபானா, பாக்கியலட்சுமி ஆர்யன் – வைரலாகும் திருமண வீடியோ இதோ.

0
614
- Advertisement -

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா திடீர் திருமணத்தை முடித்துள்ளார். வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொடரில் ஆபீஸ் சீரியல் நடிகர் கார்த்தி நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும், இந்த சீரியலில் நாயகியாக ஷபானா தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : நீங்களுமா ? திறந்துவிட்ட பட்டன், சட்டையை ஒரு பக்கம் இறக்கி பிரியங்கா கொடுத்த போஸ். புலம்பும் நெட்டிசன்கள்.

- Advertisement -

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆர்யானும் ஷபானாவும் காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ஆர்யன், இருவரும் கையில் மோதிரம் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்ட காரணம் இருவரது புற அழகு ஒரு நாள் காணாமல் போகும். ஆனால், உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும்’ என்று குறிப்பிட்டிந்தார்.

இதற்கு ஷபானா ‘என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்க தவறியதில்லை’ என்று கமெண்ட் செய்து இருந்தார். இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று ஷபானா – ஆர்யன் திடீர் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement