ரஞ்சிதமே பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த மானஸிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கா – இது குடும்ப புகைப்படம்.

0
759
- Advertisement -

விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலில் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாடகி மானசியின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வாரிசு படத்தின் முதல் பாடல் :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ஒன்று வெளியானது. ரஞ்சிதமே என்று துவங்கும் இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த பாடல் நவம்பர் 5ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியானது. ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் விஜய் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது. இந்த பாடலை பாடல் ஆசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். இந்த பாடலில் நடிகர் விஜய், ராஸ்மிகா நடனமாடும் சில காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த பாடலில் பாடகி மானசி இடம் பெற்றிருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

வாரிசு படத்தில் மானசி:

அதாவது, இந்த பாடலில் பாடகி மானசியும் பாடி இருக்கிறார். வெள்ளை ஆடையில் கையில் கரும்புடன் மானசி அந்த பாடலில் பாடி இருக்கிறார். இவர் ஒரு இந்துஸ்தானி பிண்ணணி பாடகியாவார். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் சுமார் 170 பாடல்களை பாடி இருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழி படத்தின் மூலம் தான் மானசி சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

மானசி குடும்பம்:

அதனை தொடர்ந்து தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி திரைப்படத்தில் பாடலை பாடியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி அசத்தியிருக்கிறார். ஆனால், ரஞ்சிதமே பாடல் மூலம் தான் இவர்தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். பலரும் இவரை Crush Listல் சேர்க்க இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கிறதாம். அவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு தான் இவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.

Advertisement