இவரு படத்துக்கு தான் பாலிவுட் ஹீரோ எல்லாரும்,இப்படி நிக்குராங்கா – அட்லீயை கேலி செய்த ரன்வீர்.

0
525
- Advertisement -

சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஜவான் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. இந்த படம் இதுவரை 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் இந்த படம் இடப்பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான படம் இந்தியில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி இருந்தார்கள்.ஏற்கனவே அட்லீ எந்த படம் எடுத்தாலுமே அதை காபி என்று தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ராஜா ராணி- மௌன ராகம் படத்தின் காப்பி, தெறி- சத்ரியன் படத்தின் காப்பி, மெர்சல்- அபூர்வ சகோதரர்களின் காப்பி என்று நெட்டிசன்களும், விமர்சகர்களும் விமர்சித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அம்பானி வீட்டு திருமணம் :

ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி தற்போது ஹாலிவுட் வரை போய் இருகிறார் அட்லீ. ஜவான் படத்திற்கு பின்னர் அடிக்கடி அட்லீ மும்பைக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி,  பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

திருமண விழாவில் கலந்துகொண்ட அட்லீ :

இவர்களின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கான விஐபிக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.அந்த வகையில் அட்லீயும் கலந்துகொண்டார்.

அட்லீயின் வளர்ச்சி :

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் ஒன்றிணைந்து அவரை வரவேற்றனர். அதன் பிறகு பாம்பே ஹீரோஸ் எல்லாம் அட்லி எப்பொழுது தங்கள் பக்கம் திரும்புவார், அவரை கேட்ச் பிடிக்கலாம் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி கூறி கேலி செய்து இருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவ, அட்லீயின் வளர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement