சோசியல் மீடியாவிற்கு வராததற்கு காரணம் இது தான் - எமோஷனலாக ராஷ்மிகா மந்தனா போட்ட பதிவு

By ·

தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ராஷ்மிகா மந்தனா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது பிஸியான நடிகையாக ராஷ்மிகா வலம் வந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

இதனாலேயே இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களாகவே இவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இதனாலே பலரும் இவருக்கு என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், சில நாட்களாகவே நான் எந்த ஒரு சமூக வலைத்தள பக்கத்திலும் வரவில்லை.

ராஷ்மிகா மந்தனா போஸ்ட்:

எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ளவில்லை. கடந்த மாதம் நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லாததற்கு காரணம், எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து நான் மீண்டும் குணமாகி வருகிறேன். மருத்துவருடைய ஆலோசனையின்படி இப்போது நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களை நான் கவனித்துக் கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

விபத்து குறித்து சொன்னது:

வாழ்க்கை ரொம்ப குறுகியது. சுலபமாக உடையக்கூடியது. நாளை என்ன விஷயங்கள் நிகழப் போகிறது என்பது கூட நமக்கு தெரியாது. ஆகையால் ஒவ்வொரு நாளும் சந்தோஷத்தை தேர்ந்தெடுங்கள் என்று எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார். தற்போது இவருடைய பதிவுதான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:

இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். கடைசியாக இவர் ஹிந்தியில் நடித்த அனிமல் படம் மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதனை அடுத்து ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ராஷ்மிகா நடிக்கும் படங்கள்:

அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா, சல்மான்கானுடன் சிக்கந்தர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை