கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
https://twitter.com/iam_Sabar/status/1088797855131697153
அதிலும் கடந்த ஆண்டு வெளியான 'கீதா கோவிந்தம் 'படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார். தற்போது தெலுங்கில் இரண்டு படம் கன்னடத்தில் இரண்டு படமென்று படு பிஸியாக நடித்து வருகிறார்.
இவருக்கு தெலுங்கை போலவே கன்னடத்திலும் பல ரசிகர்களும், FAN CLUB கூட இருக்கிறது. இந்நிலையில் ராஷ்மிக மந்தனா தான் கன்னடத்தில் யூடுயூப் ராணி என்று சமூக வலைத்தளத்தில் இவரது ரசிகர் ஆர்மி ஒன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. இதனை கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டர் வாசி ஒருவர், இதனை கேட்டால் யூடுயூப்கரங்களே சிரிச்சிடுவாங்க என்று கிண்டல் செய்தார்.
https://twitter.com/iam_Sabar/status/1088803670949392384
https://twitter.com/iamRashmika/status/1088823367543578625
கிண்டல் செய்ததோடு மட்டுமல்லாமல் ராஷ்மிககாவின் ரசிகர்களை இந்தியில் மோசமாக திட்டினார். இதனால் கோபமடைந்த ராஷ்மிக மந்தனா, என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால், என் ரசிகர்களை தகாத வார்த்தைகளை திட்டுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. இது எனக்கு மட்டுமில்லை அணைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் தான் என்று அந்த நபரை வெளுத்து வாங்கியுள்ளார்.





