சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ”கீதாகோவிந்தம்’ பட நடிகை.!

0
777
Rashmika

தெலுங்கில் இளம் நடிகரான விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for rashmika mandanna

நடிக்க வந்த சில காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர், சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

தற்போது விஜய் நடித்து வரும் விஜய் 63 படம் மூலம் தமிழில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ராஷ்மி மந்தனா. இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

Advertisement