ராஷ்மிகாவை லட்ச கணக்கில் ஏமாற்றிய மேலாளர் – அதற்கு ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா?

0
2139
- Advertisement -

ராஷ்மிகா மந்தனாவிடம் இருந்து பல லட்சத்தை அவருடைய மேலாளர் ஏமாற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மூலம் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:

பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து இருக்கிறார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ராஷ்மிகா நடிக்கும் பாலிவுட் படம்:

அதோடு சமீபத்தில் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் மஜ்னு. தற்போது இவர் ரன்பீர் கபருடன் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி ராஷ்மிகா படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த விளம்பரம் ஒன்று சர்ச்சையில் சிக்கி இருந்தது.

ராஷ்மிகா வீட்டில் திருட்டு:

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் அவரை ஏமாற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நடிகை ராஸ்மிகா மந்தனாவிடம் ரொம்ப நாட்களாக மேலாளர் ஒருவர் பணிபுரிந்து இருந்தார். இவர் ராஷ்மிகாவிடம் 80 லட்சம் ரூபாய் ஏமாற்றி இருக்கிறார். இது தெரிந்தும் இது குறித்து காவல் நிலையத்தில் ராஷ்மிகா எந்த ஒரு புகாரையும் அளிக்கவில்லை. அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement