படு கிளாமர் உடையில் National Crush ராஷ்மிகா கொடுத்த போஸ் இணையத்தில் வைரல்.

By Rajkumar · 11/9/2021

இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர்.

இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்துஇருந்தார் . இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : பல ஆண்டுக்கு முன் கேப்டனுக்கு எதிராக செய்த பிரச்சாரம் குறித்து கேட்ட நிருபர் - டர்ரான வடிவேலு. வீடியோவை பாருங்க.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது.அதிலும், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வரும் பல நடிகைகளை முந்தி ராஷ்மிகாவிற்கு இப்படி ஒரு கெளரவம் கிடைக்கப்பெற்றது. ராஷ்மிகா இது வரை படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்தது இல்லை. இப்படி ஒரு நிலையில் ராஷ்மிகா கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full