தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இப்படி ஒரு நிலையில் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனையால் இவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்தது.
வடிவேலு சினிமாவில் பல பிரச்னையில் சந்திக்க மற்றொரு காரணமாக இருந்தது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல் பிரச்சாரம் தான். அந்த தேர்தலின் போது வடிவேலு, தி மு கவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனால், தி மு கவிற்கு பிரச்சாரம் செய்ததை விட தே மு தி க கட்சி தலைவர் விஜயகாந்தை தான் அதிகம் விமர்சித்து இருந்தார்.
இதையும் பாருங்க : தயவு செய்து இந்த குழந்தையையும் திட்டாதீங்க – குழந்தை பிறந்த செய்தியோடு வேண்டுகோள் வைத்த அன்வர்.
தனக்கு பல படங்களில் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்தையே வடிவேலு இப்படி பேசியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் வடிவேலு ரெட் கார்டு நீக்கப்பட்ட பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இருக்கிறது. மேலும், வடிவேலு நடிக்கும் அடுத்த 5 படங்களை லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் தலைநகரம் பட இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பிரெஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய வடிவேலுவிடம் பத்திரிகையாளர் ஒருவர் தே மு தி கவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தது குறித்து கேட்டு இருந்தார். இதனால் கொஞ்சம் டர்ரான வடிவேலு, உடனே ‘அந்த கடைய மூடுங்க’ என்று பேச்சை மாற்றி மற்றொரு கேள்விக்கு தாவிவிட்டார்.