இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

Advertisement

2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக மாற்றி இருந்தது. அதிலும், தற்போதும் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. நடிகை ராஸ்மிகா, பிரபலமான ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

தெலுங்கில் கலக்கிய ராஷ்மிகா, விஜய்யின் மாஸ்டர் படத்தின் போதே அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. ஆனால், ராஷ்மிகாவை ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆம், 2001 ஆம் ஆண்டு கோகுலம் என்ற வார இதழின் அட்டை படத்தில் ராஷ்மிகாவின் புகைப்படம் வந்து இருக்கிறது.

Advertisement
Advertisement