வீட்டில் ரெய்டு நடந்தது கூட தெரியாமல் தூங்கியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா.

By Rajkumar · 16/1/2020

“இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : விஜய்யை கிண்டல் செய்த கருணாகரனுடன் சேர்ந்து நடிக்கவுள்ள விஜய்யின் தந்தை. அதவும் இந்த சர்ச்சை நாயகன் படத்தில்.

நடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் மொழி படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை தன் பக்கம் கட்டி இழுத்தவர். தற்போது கார்த்தியுடன் 'சுல்தான் ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரஷ்மிகாவின் வீட்டில் கடந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கோடகுவின் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள நடிகைகளின் வீட்டில் ஐ.டி துறையைச் சேர்ந்த சுமார் 10 அதிகாரிகள் தேடுதல் நடத்தினர்.

காலை 7 மணியளவில் அவரது வீட்டை அடைந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையை நடத்தி உள்ளார்கள். ரஷ்மிகாவின் தந்தை மதன் மந்தண்ணா, அப்போது வீட்டில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஷ்மிகா ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்துள்ளார். இதுகுறித்து ராஷ்மிகாவின் மேனஜர் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் வந்து தூங்கிவிட்டார். அவருக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full