விஜய்யை கிண்டல் செய்த கருணாகரனுடன் சேர்ந்து நடிக்கவுள்ள விஜய்யின் தந்தை. அதவும் இந்த சர்ச்சை நாயகன் படத்தில்.

0
2592
vijay-father

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்க, சிம்புவை கதாநாயகியாக கொண்டு தொடங்கப்பட்ட” மாநாடு” படம் கைவிடப்பட்டது என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர். இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரியவந்தன. மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ஃபேஸ்புக்கில் மாநாடு படம் சிம்பு உடன் கைவிடப்பட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து சிம்பு ” மகா மாநாடு” என்ற படத்தை தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் இயக்க எடுக்கப் போகிறோம் என்று அதிரடி அறிவிப்புகளை தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தை ஐந்து மொழிகளில் உருவாக்க போகிறார் என்றும் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது.

இதையும் பாருங்க : எப்படி எடையை குறைச்சீங்க. வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

மேலும், மாநாடு பஞ்சாயத்தின் போது தனது மகனுக்காக பேசி இருந்த சிம்புவின் தாய் உஷா காலை10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று உறுதி . மேலும், மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதை உறுதிசெய்த தயாரிப்பாளர்கள் சிம்புவிடம் கையெழுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ஒரு வழியாகமாநாடு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹீரோ படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கல்யாண பிரியதர்ஷன் கமிட் ஆகியுள்ளார். மேலும், இவர்களை தவிர பிரபல இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் மற்றும் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சி, காமெடி நடிகர் கருணாகரன் ஆகியோரும் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார்கள், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நடிகர் கருணாகரன் சர்கார் படத்தின் போது விஜய் குறித்து கேலி செய்து விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகி பின்னர் மன்னிப்பும் கேட்டார் என்பது தான்.

-விளம்பரம்-
Advertisement