நயன்தாரா, திரிஷாவை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்கும் நடிகை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

அதோடு சமீப காலமாகவே நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த அன்னபூரணி படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் இவர் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்திருந்தது.

Advertisement

நயன் திரைப்பயணம்:

தற்போது இவர் அஜித் நடிப்பில் உருவாகும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் மலையாளத்திலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதே போல் நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு வருகிறார்.

திரிஷா திரைப்பயணம்:

இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவருமே சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இருந்தாலும், இவருடைய படங்கள் பெரிய அளவு பேசப்படவில்லை. தற்போது இவர் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’, அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விடாமுயற்சி’ போன்ற படத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

நயன்-திரிஷா வாங்கும் சம்பளம்:

இதுமட்டுமில்லாமல் இவர் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படி திரிஷா, நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

Advertisement

சமந்தா:

தெரிந்த சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளின் ஒருவராக திகழ்ந்தவர் சமந்தா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சகுந்தலம் மற்றும் குஷி படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர் குஷி படத்திற்காக 5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்று தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர்களை முந்திக் கொண்டு நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கி இருக்கும் சம்பளம் தான் கோலிவுட்டில் பேசும் பொருளாகி இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா:

அதாவது, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிக்கந்தர். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் இந்த படத்தில் நடிப்பதற்காக 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இறுதியில் 13 கோடி சம்பளம் தருவதாக தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டது. கன்னட மொழியின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா மந்தனா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement