ராட்சசன் பட வில்லன் சரவணன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”. இந்த திரைப்படத்தில் அமலா பால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூட கூறப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சரவணன்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த நெஞ்சுக்கு நீதி படத்திலும் சரவணன் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சரவணன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தது, என்னுடைய சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் வெற்றியூர். டிப்ளமோ படித்து முடித்துவிட்டு திருச்சியில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு சினிமா மீது ஆசை இருந்தது.

Advertisement

சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று தான் 2005 இல் சென்னைக்கு வந்தேன். இரண்டு வருடம் பட வாய்ப்புக்கு தேடி அலைந்தேன். காமெடி நடிகர் முத்துக்காளை அண்ணன் கூட சேர்ந்து நிறைய சூட்டிங் ஸ்பாட் எல்லாம் போவேன். அங்க எப்படி நடிப்பது? எப்படி டப்பிங் பேசுவது? என்று ஓரமாக நின்று கவனிப்பேன். பின் நிறைய ஆடிசன் போனேன். அங்க நடித்துக் காட்ட சொல்வார்கள். அந்நியன் மாதிரி பல கெட்டப்பில் நடித்துக் காட்டினேன். அதற்குப் பிறகு தான் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தது.

பிச்சைக்காரன் படத்தில் சரவணன்

நடிகர் சரவணனின் திரைப்பயணம்:

அதிலும் நான் படத்தில் விஜய் ஆண்டனி சாருடன் பஸ் காட்சியில் அவருடன் உட்கார்ந்து இருப்பேன். பஸ் விபத்து ஏற்பட்டதும் அவர் என்னுடைய சர்டிபிகேட் எடுத்துக் கொண்டு தான் போய் சலீமாக மாறுவார். இந்த படத்தின் மூலம் தான் என்னை மக்கள் மத்தியில் அறிய ஆரம்பித்தார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். அதிலும் ராட்சசன் படத்தில் எனக்கு வில்லன் வாய்ப்பு கிடைத்தது நான் மிகப்பெரிய வரமாக கருதினேன். ராட்சசன் படத்தை தியேட்டரில் நான் பார்க்கும்போது என் சீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் கிறிஸ்டோபர், மேரி பெர்னாண்டஸ் சீனுக்கு பயங்கரமாக சத்தம் போட்டு ஆரவாரத்தை அளித்திருந்தார்கள்.

Advertisement

ராட்சசன் பட அனுபவம்:

அப்போது நான் தான் அந்த வில்லன் என்று சொல்லலாம் என்று இருந்தது. சிரித்து விடுவார்கள் என்று நான் சொல்லவில்லை. அது மட்டும் இல்லாமல் என் பக்கத்து வீட்டில் ஒருவர் 10 வருடமாக இருக்கிறார். பத்து வருடத்தில் ஒருமுறை கூட அவர் என்னுடன் சிரித்து பேசியது கிடையாது. ஆனால், ராட்சசன் படம் பார்த்து வந்தவுடன் அவர் குடும்பத்தையே கூட்டிட்டு வந்து என்னிடம் பேசினார். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். அந்தளவுக்கு ராட்சசன் படம் திரைத் துறையிலும், என் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தது.

Advertisement

உதயநிதி குறித்து சொன்னது:

பல கஷ்டங்களுக்கு நடுவில் தான் அந்த படத்தில் நடித்தேன். வடிவேல் சார் டெம்ப்லேட் வைத்து, ஆள பார்த்தா டம்மி பீஸ் மாதிரி இருந்துட்டு பயங்கரமான நடிகனா இருக்கிறானே என்றெல்லாம் மீம்ஸ் போட்டு இருந்தார்கள். என்னைப்பற்றி வந்த மீம்ஸ் எல்லாம் மிகவும் பாசிட்டிவாக தான் இருந்தது. தமிழில் மட்டும் இல்லாமல் மலையத்திலும் நிறைய மீம்ஸ் வந்தது. அதேபோல் நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் சூட்டில் 15 அடி தூரத்தில் தான் உதய் சார் இருந்தார். அவரிடம் போய் பேசலாம் என்று நினைத்தேன். அப்போ திடீரென்று அவரே, சரவணன் நீங்க ராட்சசன் படத்தில் சூப்பராக பண்ணி இருந்தீங்க என்று பாராட்டினது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சரவணன் நடிக்கும் படம்:

வில்லனாக நடிப்பதில் நிறைய அட்வான்டேஜ் இருக்கு. ஹீரோ என்றால் நல்லவனா மட்டும் தான் நடிக்க முடியும். ஆனால், வில்லனாக நடித்தால் நிறைய வெரைட்டியாக காட்ட முடியும். தற்போது நான் ஒரு பெயர் வைக்காத படத்தில் ஹீரோன்னு சொல்ல முடியாத ஹீரோ மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் சினிமாவில் இந்த இடத்தில் இருப்பதற்கு எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்தது என்னுடைய அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் தான். அவர்கள் தான் என்னை இவ்வளவு தூரத்திற்கு ஓட வைக்கிறது. இன்னும் பெருசா வருவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்று சரவணன் கூறியிருந்தார்.

Advertisement