நேத்து ராட்சசன் படம் பாத்தீங்களா ? அதில் வரும் சோபியா இவர் தான். வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 2/5/2020

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” என்ற முழுநீள காமெடி காமெடி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் மற்றும் ராம் குமார் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்தனர். விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், அம்மு அபிராமி என்று பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

https://www.tiktok.com/@ragavirenu/video/6821538434142702849

ஆனால், விஷ்ணு விஷாலை விட இந்த படத்தின் மூலம் அதிகம் பேசப்பட்டது இந்த படத்தில் சைக்கோ வில்லனாக அசத்திய நடிகர் சரவணன் தான். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்திருந்த கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது. பலரும் அந்த கிறிஸ்டோபர் யார் என்று இணையத்தளத்தில் தேடிக்கொண்டு இருந்தனர்.

இதையும் பாருங்க : என்னை அறிந்தால் படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்தது யார் தெரியுமா ?

பின்னர் ராட்சசன் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரவணன் என்பவரை அறிமுகம் செய்தனர். அவருடைய உண்மையான பெயர் சரவணன், படத்தில் கொடூரமான வில்லனாக இருந்த சரவணன் நேரில் மிகவும் பவ்யமான சாது போல தோற்றமளித்தார். ராட்சசன் படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை.

https://youtu.be/jCH7K67hjYs

அதே போல ராட்சசன் படத்தில் சிறு வயது கிறிஸ்டோபராக நடித்தவர்.அவருடைய பெயர் யாசர்,சேலத்தை சேர்ந்த பகுதி நேரத்தில் வேலை செய்துகொண்டே சென்னையில் தனது படிப்பை முடித்துள்ளார். எந்த வித சினிமா பின்பலமும் இல்லாதா இவர் 'மை டியர் பூதம்' என்ற தொடரிலும் நடித்துள்ளார். மேலும், ராட்சசன் படத்தில் சிறு வயது கிறிஸ்டோபர் வரும் பிளேஸ் பேக்கில் அவரது பள்ளி தோழியாக சோபியா என்பவர் வருவார்.

இதையும் பாருங்க : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இவர் ஒருத்தருக்கு மட்டும் தான் கேரவன் – அஜித் தனியா இருப்பார். நடிகரின் வைரல் வீடியோ.

அவரை கொலை செய்து விட்டுத்தான் கிறிஸ்டோபர் ராட்சசனாக மாறுவர். இந்த நிலையில் சோபியாவாக நடித்தவரின் சில டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய பெயர் ராகவி ரேணு, இவர் டிக் டாக் வீடியோவில் ராட்சசன் படத்தில் தான் நடித்த காட்சியின் வீடீயோவை பகிர்ந்த பின்னர் தான் இவர் தான் ராட்சசன் படத்தில் நடித்தவர் என்பதே பலருக்கும் தெரியவந்துள்ளது.

behindtalkies AMP · Quick view
View full