தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த எத்தனையோ சிறுவர்கள் தற்போது அடையாளம் தெரியாத வண்ணம் மாறியுள்ளார்கள். அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்தால் அசந்துபோவீர்கள். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் வெளியான ‘என்னை அறிந்தால் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்தவர் ஜாக் ராபின்சன்.
என்னை அறிந்தால் படத்தின் போது ஜாக் ராபின்சனின் அம்மா, வாட்சப்பில் வந்த ஒரு ஆடிஷன் மெசேஜ் பற்றி தெரிவித்துள்ளார். அப்போது எதிர்ச்சியாக ஜான்சனும் என்னை அறிந்தால் படத்தின் ஆடிஷனில் பங்கேற்றுள்ளார். அப்போது கடனுள்ள கௌதம் மேனன் பார்ப்பதற்கு கொஞ்சம் அஜித் போலவே இருகிறார் என்று கூறி ஓகே செய்துள்ளார்.அதன் பின்னர் இவருக்கு இயக்குனர் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அந்த படத்தில் சிறு வயது அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜாக் ராபின். அந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த ‘திமிருபுடிச்சவன்’ படத்திலும் நடித்துள்ளார்.துணை கதாபாத்திரத்தில் நடித்த மூன்று படங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் கவனத்தை ஈர்த்த ஜாக் ராபின் தற்போது அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ‘ஹீரோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இரும்புத்திரை மித்ரன் இயக்க இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் கதை திருட்டு விவகாரத்திலும் சிக்கியது. இதன் பஞ்சாயத்து தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.