விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 93 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் நடந்த கார் டாஸ்க்கில் சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருந்தார்கள். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வந்தார்கள். பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார்.
பிக் பாஸ் 9:
இவர்களை வெளியேற்றிய பிறகும் சோசியல் மீடியாவில் பாரு- கம்ருதினை பயங்கரமாக ட்ரோல் செய்தும் விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் பாரு- கம்ருதீனுக்கு ஆதரவாக நடிகை ரவீனா போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், பாரு-கம்ருதீன் செய்த தப்பிற்கு ரெட் கார்டு கிடைத்துவிட்டது. நமக்கும் நியாயம் கிடைத்தது. கோபத்தினால் செய்த தவறால் அவர்களுடைய வாழ்க்கையே போய்விடும் என்ற பாடம் கிடைத்திருக்கும். இருந்தாலும் நம்மில் நிறைய பேர் அவர்களை திட்டி கொண்டு வருகிறார்கள்.

ரெட் கார்ட் விவகாரம்:
எல்லாருமே மனிதர்கள் தான். தப்பு செய்பவர்கள் தான் மனிதர்கள். தப்பிலிருந்து தான் திருத்திக் கொள்ள முடியும். நாளைக்கே அவர்கள் பண்ண தப்பு உணர்ந்து நல்ல மனிதர்களாக மாறுவார்கள். அதற்காக நாமும் அவர்கள் செய்த தவறை செய்யக்கூடாது. இங்க யார் தப்பு, யார் சரி என்று ஒரு தராசு வைத்தால் யாரையுமே சொல்ல முடியாது. எல்லோருமே தவறு செய்பவர்கள் தான். ஒரு தப்பு நடந்து விட்டது. அதற்கான தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதை வைத்து இன்னமும் அவர்கள் மீது கோபத்தை காண்பிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
View this post on Instagram
ரவீனா வீடியோ:
இப்படி ரவீனா வெளியிட்ட வீடியோவை பார்த்து பலருமே ட்ரோல் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர், நீயும் பிக் பாஸில் இந்த மாதிரி தானே பண்ணிட்டு இருந்த. அதனாலதான் உனக்கு எது சரி, தப்புன்னு தெரியல என்று கூறியிருக்கிறார். அதற்கு ரவீனா, நான் பிக் பாஸில் இருந்த போது இப்படி தான் கஷ்டப்படுத்தினார்கள். அதனால் யாரையும் கஷ்டப்படுத்தாதீங்கன்னு சொல்கிறேன் என்று கூறினார். இன்னொருத்தர், சொம்பு என்று சொல்கிறார். அதற்கு ரவீனா, யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் சொம்பா. அதற்கு நான் சொம்பாகாவே இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.






