ரவீந்தர் மனைவி மகாலட்சுமியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சில மாதங்களாகவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வழக்கு குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருங்கக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும்.

அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசனில் வனிதா குறித்த இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.
இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisement

ரவீந்தர் செய்த மோசடி:

இந்த நிலையில் சோசியல் மீடியா முழுவதும் ரவீந்தர் சந்திரசேகரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சென்னையை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா. இவர் தான் ரவீந்தர் சந்திரசேகரின் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், ரவீந்தர் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்கி இருப்பதாக கூறி என்னிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசம் செய்து இருக்கிறார்.

புகாரில் கூறியிருப்பது:

பணத்தை திருப்பி கேட்டால் தரவில்லை. இதனால் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்திருந்தது. பின் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையிலும் அடைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ரவீந்தர் தரப்பில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்று உரிமையியல் பிரச்சனை எனவும் முறையாக விசாரணை நடக்காமல் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மனைவி குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

மேலும் நான் தயாரித்து சில படங்கள் வெளியாக உள்ளது. அந்த திரைப்படங்களில் வந்த பின் நான் பணத்தை திரும்பி தருகிறேன் என்றும் கூறியிருந்தார். கடந்த 14 நாட்களாக சிறையில் உள்ள தனக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றது எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். பின் விசாரணையில் இது தொழில் வர்த்தக நடவடிக்கை தான். இதை மோசடி வழக்கக்காக பதிவு செய்ய முடியாது என்றும் ரவீந்தர் தரப்பில் விவாதிக்கப்பட்டது. மேலும் அந்த பணத்தை திருப்பி தயாராக இருக்கிறேன் ஏற்கனவே 2.5 கோடி வழங்கப்பட்டது. அதனை புகார்தாரர் மறைத்துள்ளதாகவும் மனுவில் கூறியிருந்தார்.

Advertisement

மகாலக்ஷ்மியை விமர்சித்த நெட்டிசன்கள்:

புகார் தாரர் தரப்பில் தன்னிடம் மோசடி செய்த பணத்தை இதுவரை மீட்டு தரவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கூறியிருந்தார். இதனை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதை எதையும் கண்டு கொள்ளாமல் ரவீந்தர் மனைவி மகாலட்சுமி அவர்கள் சீரியல், போட்டோ சூட், விளம்பரம் என்று பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே மகாலட்சுமியை விமர்சித்தும் கண்டித்தும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement