‘அதை எடுத்துட்டு வரலனா மாமியார் கொடுமை தான்’ – மஹாலக்ஷ்மிக்கு ரவீந்தர் போட்ட கட்டளை.

0
478
ravindar
- Advertisement -

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை முன்னாள் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் திருமணம் கழித்த செய்திகள் வெளியான போது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கைகொடுத்து இருந்தார்.

- Advertisement -

மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை :

நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வந்தனர்.

இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி ஒரு நிலையில் தான் மஹாலக்ஷ்மி ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். ஒன்றரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த தன் மனைவிக்கு ரவீந்தர் பல பரிசுகளை அளித்து இருக்கிறாராம்.

-விளம்பரம்-

சமீபத்தில் பிரைவேட் ஜெட்டில் சென்றிருக்கும் புகைப்படம் ஒன்றை ரவீந்தர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும், திருச்சி பக்கத்தில் டால்மியாபுரம் குலதெய்வ கோவிலுக்கு போறேன், செஞ்சிடாதீங்க இந்த போட்டோவை” என கூடவே விளக்கத்தையும் அளித்திருக்கிறார் ரவீந்தர். சமூக வலைதளத்தில் தன் மனைவி அடிக்கடி கலாய்த்து பதிவுகளை போட்டு வருகிறார் ரவீந்தர். அந்த வகையில் சமீபத்தில் தன் முகநூல் பக்கத்தில் ரவீந்தர் ”ண்டே family timeனு எல்லோரும் சொல்கிறாங்க. ஆனா, எனக்கு துரதிஷ்டவசமாக வேறு விதமாக இருக்கிறது.

மஹாலக்ஷ்மியை கலாய்த்த ரவீந்தர் :

சஎனக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று சொல்லிவிட்டு கலையில் சீக்கிரம் கிளம்பிவிட்டால். அவளுக்கு உணவு ஆர்டர் செய்ய பல வசதி இருந்தும் அன்பே வா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்து செல்லும் டன்ஸோ டெலிவரி பாய் ஆகிவிட்டேன்.பொண்டாட்டி மஹாலக்ஷ்மி ஷங்கர்.. எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு திருப்பி கொண்டுவந்துவிடு. இல்லை என்றால் மாமியார் கொடுமை மட்டுமின்றி.. அம்மா என்னையும் டன்ஸோவில் சேர வைத்துவிடுவார்.

Advertisement