2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒரே ஒரு தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி அரை இறுதி சுற்றிறிற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் தோனியின் பர்பார்மன்ஸ் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

மேலும், இந்த்ஸ் தொடரோடு தோனி ஒய்வு பெற வேண்டும் என்றும் பலரும் கூறிவந்த நிலையில் தனது ஓய்வு குறித்து பேட்டி ஒன்றை இந்திய அணியின் வீரரான தோனி அளித்துள்ளார். ஏபிபி செய்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : ஓய்வு பெறும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை. நான் ஓய்வு பெறுவதை குறித்து சிந்திப்பதும் இல்லை ஆனால் சிலர் இன்றைய போட்டியோடு ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : கமல் கூறிய 10 கோடி வாக்குகள்.! ஆனால் உண்மை இது தான்.! 

Advertisement

மேலும், உலகக்கப்போய் தொடரை தொடந்து பார்த்து வரும் ரசிகர்கள் ஒரு விடயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள். அது என்னவென்றால் தோனி அடிக்கடி தனது பேட் ஸ்டிக்கரை மாற்றிக் கொண்டே இருப்பது தான். இந்த உலகக்கப்போய் தொடரில் மட்டும் அவர் கிட்டதட்ட மூன்று முறை தனது பேட் ஸ்டிக்கரை மாற்றி வெவ்வேறு நிறுவனங்களின் லோகோக்கள் பதியப்பட்ட பேட்டை கொண்டு விளையாடி உள்ளார்.

இந்த உலக கோப்பை தொடரில் SG லோகோ ஸ்டிக்கர் கொண்ட பேட், BAS லோகோ ஸ்டிக்கர் கொண்ட பேட், ss ஸ்டிக்கர் கொண்ட பேட் என்று மூன்று விதமான பேட்டை பயன்படுத்தினார். இது குறித்து பதிலளித்துள்ள தோனியின் மேனேஜர் அருண் பாண்டே, தோனி இந்த உலகக்கோப்பை தொடரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் கொண்ட பேட்டை பயன்படுத்துவது உண்மை தான். ஆனால் அதற்காக அவர் பல நிறுவங்களோடு ஒப்பத்தில் இருக்கிறார் என்பது ஒரு வதந்தி தான். தோனியின் ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் உதவிய சில நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே அவர் பல நிறுவங்களின் லோகோ கொண்ட பேட்களை பயன்படுத்துகிறார். அதற்காக அவர் எந்த ஊதியமும் பெறவில்லை.

Advertisement

பொதுவாக, கிரிக்கெட் வீரர்கள் தங்களது பேட்களில் ஸ்பான்சர்ஸ் பெயரை பயன்படுத்த 4-5 கோடி வரை ஊதியமாக பெறுவது வழக்கம். ஆனால் தல தோனிக்கு தற்போது யாரும் ஸ்பான்சர் கிடையாது என்பது தான் உண்மை. அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த SPARTAN நிறுவனத்துடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்தம் சில சட்ட சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement