கமல் கூறிய 10 கோடி வாக்குகள்.! ஆனால் உண்மை இது தான்.!

0
14219
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக இரண்டு வாரத்தை கடக்க உள்ளது. இந்த நிலையில் நடந்த வாரம் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா,சேரன், கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது பாத்திமா பாபு தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

கடந்த ஒரு வாரமாக முதல் எலிமினேஷனுக்கான வாக்கெடுப்பு நடந்து வந்தது. சமீபத்தில் ஒளிபரப்பான ப்ரோமோ வீடியோவில் உலக நாயகன் கமல் இந்த வாரத்தில் மட்டும் 10 கோடி வாக்குகள் பதிவகையுள்ளதாக கூறி இருந்தார். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 10 கோடி தான் அப்படியிருக்க எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 10 கோடி வாக்குகள் பதிவானது என்பது ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

Bigg-Boss-3-kamal

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நடக்கும் இந்த ஆண்டு நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும் பல மாற்றங்களை செய்துள்ளனர். கடந்த ஆண்டு கூகுள் மூலம் மக்கள் நேரடியாக போக்குகளை பதிவிட்டனர் ஆனால் இம்முறை கூகுள் வாக்குப்பதிவினை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறுத்தியுள்ளது. ரசிகர்கள் ஹட் ஸ்டாரில் மட்டுமே வாக்களிக்க முடியும். இதனால் ரசிகர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அப்படி இருந்தும் எப்படி பத்துகோடி வாக்கு வந்தது என்பது ஒரு கேள்வியாக எழுகிறது

-விளம்பரம்-

அது எப்படி எனில் இம்முறை ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 வாக்குகளை அளிக்கலாம். அப்படிப்பார்த்தால் ஒரு வாரத்திற்கு ஒரு நாளைக்கு 50 வாக்குகள் என்ற வீதம் ஒரே ஒரு ரசிகர் 350 வாக்குகளை அளிக்கலாம்.அந்த வகையில் பார்த்தால் 285714 பார்வையாளர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் 50 வாக்குகளை அளித்து வந்தால் 10 கோடி வாக்குகள் வந்துவிடும்.இது தவிர மிஸ் கால் மூலமாகவும் வாக்களிக்கலாம். எனவே, கமல் கூறிய அந்த பத்து கோடி வாக்கு என்பது 28 5 7 1 4 ரசிகர்கள் வாக்களித்தால் போதுமானதாகும்.


Advertisement