இந்த ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் சீனா சென்றார் ! கசிந்த தகவல் !

0
3482
vijay

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. பொதுவாக அஜித் எப்போதும் எந்த விழாவிற்கும் போவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஆனால் விஜய் ஏன் போகவில்லை தெரியுமா? நட்சத்திர கலைவிழாவிற்கு விஜய்க்கு அழைப்பு விடுத்து அவர் போகவில்லை. ஆனால் அந்த கலைவிழா நடைபெற்ற அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளிநாட்டிற்கு செல்வது போல் சில போட்டோக்கள் வெளியானது.

ஆனால் கலைவிழாவில் அவர் இல்லை. மேலும் அந்த விழாவிற்கு வெளியிட்ட போஸ்டரிலும் விஜயின் போட்டோ இல்லை. இதனால் விஜயை திரையில் பார்க்க ஆவலாக இருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்.

ஆனால் விஜய் எங்கு சென்றார் தெரியுமா.? அவர் தனது குடும்பத்துடன் சீனா சென்றுள்ளார். பொங்கல் விடுமுறையை கொண்டாட சீனா சென்றுள்ளார் விஜய். விஜய் முருகதாஸ் பட வேலைகள் துவங்கும் முன் ஒரு சின்ன ப்ரேக் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

மேலும் வரும் 12ஆம் தேதியே சென்னை திரும்ப உள்ளார் விஜய். பொங்கல் விடுமுறையில் விஜய்-62 அறிவிப்புகள் வெளியாகும் இதனை காரணமாக சென்னை திரும்பி அதற்கான வேளைகளில் ஈடுபட உள்ளார் தளபதி.