தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் ரஜினி நடித்து இருந்தார். இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவ ராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர்.

இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெற்றியை கண்டது. அதோடு இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் 'வேட்டையன்' படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
ரஜினி திரைப்பயணம்:
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்தது. மேலும், இந்த படத்தில் ரஜினி அவர்கள் காவல் அதிகாரியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து ரஜினியின் 171 வது படமான 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

கூலி படம்:
கிரீஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனாலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் ப்ரோமோ எல்லாம் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த படத்தினுடைய ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

படம் குறித்த அப்டேட்:
இந்த படத்தில் ரஜினி தாதா வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் பட நடிகையும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, மலையாள மொழி நடிகை ரெபா மோனிகா ஜான் தான் இந்த படத்தில் நடிக்கிறார்.

ரெபா மோனிகா குறித்த தகவல்:
இவர் மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, விஜயின் நடிப்பில் வெளிவந்திருந்த 'பிகில்' படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக ரெபா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இவர் ரஜினியின் கூலி படத்தில் இணைந்திருக்கிறார்.






