வெளிநாட்ல இருந்து CCTV வீடியோ எப்படி கிடைக்குது, கடைக்காரன் கிட்ட பேசிடுவாங்களோ - கேலிக்கு உள்ளான அஜித்தின் வீடியோ.

By Ajju · 5/7/2022

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக என்றென்றும் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வி அடைந்தது.

https://twitter.com/prakashpins/status/1543928392617062401

பல ஆண்டுகளுக்கு முன் கலைஞரின் பாராட்டு விழாவில் அஜித் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது பலர் அறிந்த உண்மை.அந்த விழாவிற்கு பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகொள்வது இல்லை. அஜித் தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கலந்துகொள்ளாததால் அடிக்கடி விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அதே போல அஜித்தின் புகைப்படங்கள் கூட வெளியவாது அரிதான ஒரு விஷயம் தான்.

இதையும் பாருங்க : 'RRR படம் ஒரு Gay லவ் ஸ்டோரி, அதில் ஆல்யா' ஆஸ்கர் விருது வென்ற ஷங்கர் பட பிரபலத்தின் சர்ச்சையானை டீவ்ட் - உச்சகட்ட கொந்தளிப்பில் ரசிகர்கள்

தொடர்ந்து வெளியாகும் புகைப்படங்கள் :

ஆனால், கடந்த சில வாரமாக அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போது அஜித் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு பைக்கிலேயே பல இடங்களுக்கு சென்று வருகிறார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அடிக்கடி வெளியாகி கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய்யின் பிறந்தநாள் நெருங்கும் போது தான் அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வைரலானது.

https://twitter.com/ramk8060/status/1543930525328744448

தன் PRகளை வைத்து அஜித் செய்யும் வேலையா :

அதே போல விஜய்யின் பிறந்தநாளில் கூட அஜித் குறித்த ஹேஷ் டெக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. அதனால் விஜய்க்கு போட்டியாக அஜித்தே தனது Pr களை வைத்து இப்படி புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் கூட பதிவு ஒன்றை ஷேர் செய்து இருந்தார். அதில் ' தன் படத்தை விளம்பரப்படுத்த மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார்.

விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் :

ஆனால், வருஷத்துக்கு 365 நாளும் அவருடைய போட்டோவை மட்டும் நாம் பார்க்க முடியும். ஏனென்றால் அஜித்திற்கு விளம்பரம் புடிக்காது. அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்து போட்ருறாங்க நம்புங்கண்ணே, நம்புங்க' என்று பதிவிட்டு இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டையை திட்டி தீர்த்தாலும், அவரின் பதிவிற்கு ஆதரகவாக பல விஜய் ரசிகர்கள் கமன்ட் செய்தனர்

சமீபத்தில் வெளியான CCTV வீடியோ :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லண்டனில் கடை ஒன்றில் அஜித் ஷாப்பிங் செய்த வீடியோ ஒன்று படு வைரலாக பரவி வருகிறது. அங்கு கேஷியருக்கு கை குலுக்கிவிடுகிறார். பின்னர் ஒரு கார்டை கொடுத்து ஏதோ கேட்கிறார். பிறகு கடைக்கு உள்ளே சென்று எதையோ தேடுகிறார். அப்போது ஒரு பெண் வருவதை கவனிக்கிறார். உடனே அவருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார். இதுதான் அஜித்தின் குணம் என அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

https://twitter.com/ItzAnand07_/status/1543930848797265921

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

ஆனால், இந்த வீடியோ விமர்சங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது. பொதுவாக அஜித் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை. மேலும், அவர் விளம்பரங்களை விரும்பாதவர் என்று தான் அவரது ரசிகர்கள் மார்தட்டி கொண்டு இருக்கின்றனர். ஆனால், CCTV வீடியோ எல்லாம் எப்படி இவனுங்களுக்கு கிடைக்கிறது கடைக்காரன் கிட்ட முன்கூட்டியே பேசி வாங்கிடுவான்களா ??? என்று கேள்வியும் எழுந்து உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full