‘RRR படம் ஒரு Gay லவ் ஸ்டோரி, அதில் ஆல்யா’ ஆஸ்கர் விருது வென்ற ஷங்கர் பட பிரபலத்தின் சர்ச்சையானை டீவ்ட் – உச்சகட்ட கொந்தளிப்பில் ரசிகர்கள்

0
668
rrr
- Advertisement -

ராஜமவுலியின் RRR படம் குறித்து ரசூல் பூக்குட்டி போட்டிருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அதிலும் இவர் Slumdog Millionaire என்ற படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை வென்று இருந்தார்.

-விளம்பரம்-

அதேபோல் கேரள வர்மா பழசி ராஜா என்ற மலையாள படத்திற்காக சிறந்த ஆடியோ கிராபிக்கான தேசிய விருதையும் ரசூல் பூக்குட்டி பெற்றிருந்தார். இப்படி இந்திய அளவில் மிகப் பிரபலமான நபராக ரசூல் பூக்குட்டி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் ராஜமவுலியின் RRR படத்தை விமர்சித்து போட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருக்கிறது. இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி.

- Advertisement -

இதையும் பாருங்க : கைவிட்ட இரண்டு கணவர்கள், பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை – சத்தமில்லாமல் விஷால் செய்துள்ள உதவி.

RRR படம்:

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்தது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

RRR படம் குறித்த தகவல்:

இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்தப் படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. வசூலிலும் இந்த படம் கோடிக்கணக்கில் குவித்து இருந்தது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

ரசூல் பூக்குட்டி டீவ்ட்:

மேலும், படத்தில் VFX காட்சிகள் அற்புதமாக வந்து இருக்கிறது. அதோடு ஆக்ஷன் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த படம் குறித்து பலமொழி பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தை குறித்து ரசூல் பூக்குட்டி டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதது, RRR படம் தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை (gay love story).

கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்:

மேலும், படத்தின் கதாநாயகியான ஆலியா பட் அதில் ஒரு செட் பிராப்பர்ட்டி போன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்று விமர்சித்து இருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதைத் தொடர்ந்து ரசிகர்கள் முதல் நெட்டிசன்கள் என பலரும் ஆஸ்கர் நாயகன் இடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், பலரும் ரசூல் பூக்குட்டியின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை கூறி வருகின்றனர்.

Advertisement