வாரிசு படத்தை கைவிட்ட red gaint – உதயநிதி சொன்ன விஷயம் – செம குஷியில் தல ரசிகர்கள்

0
335
udhay
- Advertisement -

வாரிசு திரைப்படத்திற்காக விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், படத்தில் முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

- Advertisement -

கலகத் தலைவன் படம்:

மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் கலகத் தலைவன். இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஆரவ், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தில்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

உதயநிதி பேட்டி:

பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் கலகத் தலைவன் படத்தின் சிறப்புக்காட்சி நேற்று போடப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட உதயநிதி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் வாரிசு விஜய் குறித்து கூறியிருந்தது, அஜித்தின் துணிவு படத்தின் தமிழகம் ரிலீஸ் உரிமையை மட்டுமே நாங்கள் பெற்றிருக்கிறோம்.

-விளம்பரம்-

விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி:

இன்னும் இந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஆனாலும், படம் மிகச் சிறப்பாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நாங்கள் வாங்கவில்லை. அந்த படமும் வெற்றி அடைய விஜய் மற்றும் பட குழுவினர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

வாரிசு படம் :

மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement