ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவுக்கு நடந்து இருக்கும் வளைகாப்பு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி சினிமா வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் 1998ல் நடன கலைஞராக அறிமுகமானார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார். மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது. இதன் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இவரின் நகைச்சுவைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
ரெடின் கிங்ஸ்லி திரைப்பயணம்:
இதை அடுத்து ரெடின் கிங்ஸ்லி பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதற்கிடையில் மாஸ்டர் பட நடிகையை இவர் திடீர் திருமணம் முடித்தார். அவர் வேற யாரும் இல்லை சங்கீதா தான். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான் சங்கீதா. இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர். இந்த படத்தில் இவர் சில நிமிடம் நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

சங்கீதா திரைப்பயணம்:
இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் மைசூரில் உள்ள ஒரு படப்பிடிப்பில் நடந்தது. இந்த திடீர் திருமணத்தில் படகுழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர், சங்கீதா இந்து என்பதால் இரு முறைப்படி திருமணம் நடைபெற்றது.

சங்கீதா கர்ப்பம்:
அதோடு இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் வந்தது. இருந்தாலும், அதை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்போது இருவருமே தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை அடுத்து கிங்ஸிலியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதனால் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பின் இது தொடர்பாக இருவரும் அறிவித்து இருந்தார்கள்.

சங்கீதா வளைகாப்பு:
இந்த நிலையில் நடிகை சங்கீதாவுக்கு வளைகாப்பு நடத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு எளிமையான முறையில் வளைகாப்பை ரெடின் கிங்ஸ்லி நடத்திருக்கிறார். சங்கீதா வளைகாப்புக்கு தயாராகி இருக்கும்போது எடுத்த சில வீடியோக்களை தான் அவருடைய மேக்கப் ஆர்டிஸ்ட் instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






