காசுக்காக இப்படி எல்லாம் செய்வீங்களா? promotional post ஆல் ரெஜினாவை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

0
546
regina
- Advertisement -

காசுக்காக இப்படி எல்லாம் செய்வீர்களா? என்று நடிகை ரெஜினாவை நெட்டிசன்கள் விளாசி இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். பின் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-
Actres Regina Cassandra Latest Sizzling Photo Goes Viral

இந்த படத்தை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது தெலுங்கில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடி இருக்கிறார். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

ஆச்சார்யா படத்தில் ரெஜினா:

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக திருவும், இசையமைப்பாளராக மணிசர்மாவும் பணியாற்றியிருக்கிறார்கள். மேலும், இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தில் ரெஜினா அவர்கள் சானா கஷ்டம் என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த பாடலில் ரெஜினா உடன் சிரஞ்சீவியும் நடனம் ஆடி இருப்பார். ஆனால், சமந்தா பாடல் அளவுக்கு ரெஜினாவின் பாடல் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை என்றாலும் சர்ச்சையில் சிக்கி இருந்தது. அதோடு ஆச்சார்யா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

ரெஜினா நடிக்கும் படங்கள்:

தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி , சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற பல படங்களில் ரெஜினா நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

-விளம்பரம்-
பிரபல நடிகரை காதலிக்கும் ரெஜினா ? உண்மையை கூறிய ரெஜினா - புகைப்படம் உள்ளே -  Tamil Behind Talkies

சோவியல் மீடியாவில் மது விளம்பரம்:

இதனால் இவரை 1.8 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் ரெஜினா செய்திருக்கும் செயல் குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். அது என்னவென்றால், சமீப காலமாக நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பொருட்களை விளம்பரம் செய்து காசு பார்த்து வருகின்றனர். இதில் சில தரமற்ற பொருள்களை நடிகைகள் விற்பதன் மூலம் பல பிரச்சினைகள் எழுந்து இருக்கிறது. இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேல் போய் நடிகைகள் மது விற்பனையில் இறங்கி காசு பார்த்து வருகிறார்கள்.

மது விற்பனையில் ரெஜினா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழும் பூஜா ஹெக்டே, ராய்லட்சுமி, ஹன்சிகா,காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் மது விளம்பரத்தை சர்வ சாதாரணமாக விளம்பரம் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது ரெஜினா இணைந்து இருக்கிறார். தற்போது ரெஜினா மதுபான விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதற்கான போட்டோவையும் தன்னுடைய இன்ஸ்டாவில் ரெஜினா பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் காசுக்காக இப்படியும் செய்வீங்களா? என்று கோபத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertisement