‘அந்தாளு செத்தா பட்டாசு வெடிச்சு கொண்டாடுவேன்’ – பார்த்திபன் பட நடிகை ஆவேசம்.

0
2211
- Advertisement -

அந்த ஆளு செத்தா பட்டாசு வெடிச்சு கொண்டாடுவேன் என்று நடிகை ரேகா நாயர் ஆவேசமாக அளித்திருக்கும் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ரேகா நாயர். இவர் சின்னத்திரை சீரியலில் மட்டுமில்லாமல் படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இந்த இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக ரேகா நாயர் நடித்து இருந்தார். பின் இது குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. பின் இந்த சர்ச்சை குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரை விமர்சித்து மோசமான முறையில் பேசி இருந்தார்.

- Advertisement -

ரேகா நாயர்-பயில்வான் சண்டை:

இதனால் கோபம் அடைந்த ரேகா நாயர் பீச்சில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை, நான் நிர்வாணமாக நடித்தால் உனக்கு என்ன? நான் என்ன உன் பொண்டாட்டியா? என்று கண்ணா பின்னா பேசி இருந்தார். அதோடு அவரை வாயில் வந்த வார்த்தைகளால் கேவலமாக திட்டி இருக்கிறார். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தது.

பயில்வான் ரங்கநாதன் சொன்னது:

மேலும், சண்டைக்கு பிறகு பயில்வான் ரங்கநாதன், ரேகா நாயர் குறித்து பேசியது, ரேகா நாயர் என்னிடம் சண்டை போட்டது ஒரு செட்டப் செய்த நாடகம். இவர் என்னிடம் சண்டை போட்டதுமட்டுமில்லாமல் அவருடைய சட்டையை தூக்கி காட்டி மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என்று கூறி இருந்தார். இதனை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் திரையுலகினர் குறித்து தொடர்ந்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

வீடியோவில் ரேகா நாயர் சொன்னது:

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனை குறித்து ரேகா நாயர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், பயில்வான் செத்தா நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். அன்னைக்கு தான் எனக்கு தீபாவளி. நான் வாழ்க்கையில் பட்டாசு வெடித்ததே இல்லை. நரகாசுரன் செத்த நாளை தமிழர்கள் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். என்னுடைய நரகாசுரன் பயில்வான் ரங்கநாதன் தான் என்று பேசி இருக்கிறார்.

Advertisement