மாலா அக்கா ஐ லவ் யூ என்ற ஒரு டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர் நடிகை சிஜா ரோஸ். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் கன்னடம் மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் “கோழிகூவுது” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. பின் 2016 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த றெக்க திரைப்படத்தில் மாலா அக்கா கதாபாத்திரத்தில் சிஜா ரோஸ் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் ஒரு பெண் ஆசிரியராக நடித்திருப்பார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டே இருந்தது.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலினின் ரியல் மனைவியை பார்த்துளீர்களா ? இவருக்கு இவ்ளோ பெரிய பசங்க இருக்காங்களா.

Advertisement

இந்த படத்தில் குட்டி விஜய் சேதுபதி “மாலா அக்கா ஐ லவ் யூ” என்று வெளிப்படையாக சொல்லும் காட்சி இன்றும் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக பரவி வருகிறது. இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது. இந்த காட்சி சிஜா ரோஸ் அவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ரெக்க படத்திற்கு பின் விஜய் நடித்த பைரவா படத்திலும் நடித்து இருந்தார்.

ரெக்க படத்தில் இவர் தாவணி பாவாடை அணிந்து கிராமத்து பெண் போல் நடித்திருந்தார். எப்போதும் சிஜா ரோஸ் அவர்கள் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் தற்போது சிஜா ரோஸ் அவர்கள் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நம்ம மாலா அக்காவா!!! என வாயை பிளந்தபடி பார்த்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement