பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலினின் ரியல் மனைவியை பார்த்துளீர்களா ? இவருக்கு இவ்ளோ பெரிய பசங்க இருக்காங்களா.

0
2100
stalin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதை மையமாக கொண்ட கதை ஆகும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் 650 வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணித்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடரில் மூர்த்தி என்ற அண்ணன் கதாபாத்திரத்தில் ‘ஆனந்தம்’ பட மம்முட்டி ரேஞ்சுக்கு பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்டாலின். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஸ்டாலின் அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல இவர் சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : அட்லீயின் ஹேட்டர்ஸ்கள் குறித்து அட்லீ ஸ்டைலில் பதில் அளித்த பிரியா – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான். இந்த சீரியலில் இவரின் மனைவியாக பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா நடித்து வருகிறார். ஆனால், ஸ்டாலினின் உண்மையான மனைவி யார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இப்படி ஒரு நிலையில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலினுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களை பெரிதாக மீடியா வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றனரா என்று ரசிகர்கள் வியந்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement