எனக்கு இந்தியர்களை புடிக்கல, இந்தியனா இருந்தா வெளியே போயிடு – ஆபாச நடிகையாக மாறிய கார் ரேஸர் காட்டம் – காரணம் இது தானாம்.

0
6436
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பிரபல கார் பந்தய வீராங்கனை ஒருவர் வருமானம் இல்லாததால் ஆபாச பட நடிகையாக களம் இறங்கி உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆஸ்திரேலியாவில் மிக பிரபலமான வி8 சூப்பர் கார் பந்தய வீராங்கனை ரெனி கிரேசி. இவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த வர். இவர் வி8 சூப்பர் கார் பந்தயங்களில் போட்டியை முழுமையாக நிறைவு செய்த முதல் பெண் ஆவார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is maxresdefault.jpg

இவர் கார் பந்தயங்களில் இருந்து விலகி தற்போது ஆபாச படங்களில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் எதிர்கால போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டது.கார் பந்தயங்களில் வருவாய் இல்லாததால் வாழ்கை நடத்துவது மிகவும் கஷ்டமாக மாறிவிட்டது.பொருளாதார நெருக்கடியே எனது இந்த முடிவுக்கு காரணம்.

- Advertisement -

எனது குடும்பத்தாருடன் இது தொடர்பாக விவாதித்தும், அவர்களின் ஒப்புதலுடன் தான் இந்த முடிவுக்கு வந்தேன். கார் பந்தயங்களில் இதுவரை நான் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.ஆனால், தற்போது வாரத்திற்கு 25,000 டாலர் வரை என்னால் வருவாய் ஈட்ட முடிகிறது. மாதம் 65,000 டாலர் முதல் 90,000 டாலர் வரை நான் வருவாய் ஈட்டி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Renee Gracie: How Financial Woes Turned Aussie Supercars Driver Into A  High-Earning Porn Star

ரெனி கிரேசி ஆபாச படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது இணையதள பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இவர் இந்தியர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து உள்ளார். அதில், இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே, உன்னை வரவேற்கவில்லை. இதற்கு முக்கிய காரணமே  இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இவர் கூறுவதற்கு காரணம் என்னவெயில் இவரது புகைப்படம் மற்றும் வீடியோவை பலர் அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், மேலும் இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால் இந்தியர்கள் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறாராம் இந்த ஆபாச நடிகை.

Advertisement