ரேணிகுண்டா பட நடிகையை ஞாபகம் இருக்கா – லாக்டவுனினால் இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்க.

0
2254
sanusha
- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் தற்போது கிடுகிடுவென வளர்ந்து விட்டார்கள். அந்த வகையில் தமிழில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். தமிழில் 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் தனது ஐந்து வயதிலேயே மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். காசி திரைப்படத்திற்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரைப்படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகவும் சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டதால் அவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இருப்பினும் கமல் நடிப்பில் வெளியான எத்தனை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், கார்த்திக்நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் மூன்று தங்களில் ஒருவராக நடித்திருந்தார். இறுதியாக சசிகுமார் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார் சனுஷா. தற்போது கையில் எந்த பட வாய்ப்பும் இல்லாததால் மிகவும் கவலையில் இருக்கிறார் அம்மணி.

திரைப் படங்களில் அவரை காணமுடியவில்லை என்றாலும் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகைசனுஷா. அந்த வகையில் சமீபத்தில் நடிகை சனுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் முன்பை விட கொழுக் முழுக் தோற்றத்தில் படு குண்டாக இருக்கிறார் சனுஷா.

-விளம்பரம்-
Advertisement