இதுக்கு பெண் தான் Belly Danceஆ – சீரியல் நடிகை ரேமாவை கேலி செய்யும் நெட்டிசன்கள். அதுவும் பாபா பாஸ்கர் கொடுத்த Reaction.

0
521
rhema
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் ராஜா ராணி, அரண்மனை கிளி,மௌன ராகம், பாரதிகண்ணம்மா, சிவா மனசுல சக்தி என்று திரைப்பட டைட்டில்களை வைத்து ஒளிபரப்பான பல்வேறு சீரியல்கள் மாபெரும் வெற்றியடைந்தது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்த சின்னதம்பி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் 442 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமான தொடராக திகழ்ந்து வந்தது.

-விளம்பரம்-

ப்ரஜின் மற்றும் பவானி ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த தொடரில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரீமா அசோக். இந்த தொடர் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலத்தை பெற்ற இவர் முதன் முதலில் சீரியல் நடிகையாக அறிமுகமானது கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘களத்து வீடு’ என்ற தொடர் மூலம் தான். இந்த தொடரை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, ரெக்கை கட்டி பறக்குது மனசு போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் ரீமா.

- Advertisement -

நடனத்தின் மீது ஆர்வம் :

மதுரையை பூர்விகமாக கொண்ட இவருக்கு 19 வயது தான் ஆகிறது. மேலும், தனது 16 வயதிலேயே கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்திருந்தார். மேலும், இவர் சிறு வயதிலேயே நடனத்தை கற்றுத்தேர்ந்தவர். இதனால் ஒரு சில நடன நிகழ்ச்சிகளும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி பன் அன்லிமிடேட் நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக நடனமாடி இருந்தார்.

பெல்லி டான்ஸ் ஆடிய ரேமா :

இதை தொடர்ந்து தற்போது ஒரு சில சீரியல் மற்றும் ரியலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபர்ப்பாகி வரும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் நடனமாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பெல்லி நடனம் ஆடி இருந்தார். இதை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர் பாபா பாஸ்கர் அடிக்கடி வாவ் வாவ் என்று பாராட்டிக்கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-

கேலி செய்யும் நெட்டிசன்கள் :

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் இது தான் பெல்லி டான்ஸ்ஸா என்று கேலி செய்து வருகின்றனர். இதே நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஒருவர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவரை இந்தியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பின் கைக்குழந்தையுடன் இவரை தனியாக விட்டு சென்று விட்டார். அந்த பெண் தனியாக தன்னுடைய வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றார்.

விமர்சனங்களுக்கு உள்ளாகும் நடனங்கள் :

மேலும், நடனத்தில் சாதித்து காட்ட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஒரு சில நடனம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துவிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த நிகழ்ச்சியில் கிளாமர் பாடலுக்கு ஒரு ஜோடி சொட்ட சொட்ட நனைந்தபடி படு கவர்ச்சியாக ஆடி இருந்தது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement