ஜனனியை விட அவ தங்கச்சி அழகா இருக்கா..! அதுக்கு காமெடி நடிகர் சதீஷ் என்ன சொன்னார் தெரியுமா..?

0
970
janani-and-krithika
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் 2 மக்கள் மத்தியில் அபிமானத்தை பெறவில்லை. இதனால் மக்களின் பல்வேறு விமர்சனங்களை பிக் பாஸ் 2 பெற்று வருகிறது. அதிலும் பிரபலங்கள் சிலர் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

krithika-janani

- Advertisement -

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் “ஃப்ரீஸ்” டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஜனனி ஐயரின் குடும்பத்தினர் சென்றிருந்தனர்.

இதில் ஜனனியின் அம்மா மீனாட்சி, தங்கை கிருத்திகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்க்கு சென்றிருந்தனர். இத்தனை நாட்கள் ஜனனனிக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதா என்று பல பேருக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பிரபல தொகுப்பாளரும், சீரியல் நடிகருமான ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜனனியை விட அவுங்க தங்கச்சி நல்லா இருக்காங்கனு …என் பொண்டாட்டி சொன்னா’ என்று கிண்டலாக ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த பதிவிற்கு ரீ- ட்வீட் செய்திருந்த பிரபல காமெடி நடிகர் சதீஷ், அது வெறும் வதந்தி, நம்பாதீங்க என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். சதீஷ் கூறியதை வைத்து பார்க்கும் போது ஜனனியை விட அவரது தங்கை கிருத்திகா அழகில்லை என்று குறிப்பிடுவது போல தெரிகிறது. இருப்பினும் ட்விட்டர் வாசிகள் சிலர் கிருத்திகா, ஜனனியை விட அழகாக இருக்கிறார் என்று ட்வீட் செய்து வருகின்றனர்.

Advertisement