பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது ஏன்?- முதல் முறையாக மனம் திறந்த ரித்திகா

0
272
- Advertisement -

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து வெளியேறிய காரணத்தை நடிகை ரித்திகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார் ரித்திகா. பின்னர் இவர் சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என்று பல சீரியல்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. குடும்பப் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் ‘அமிர்தா’ என்ற கதாபாத்திரத்தில் தான் ரித்திகா நடித்திருந்தார்.

- Advertisement -

ரித்திகா திருமணம்:

இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது, கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பணியாற்றிய வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரித்திகா திருமணம் செய்து கொண்ட வினு என்பவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகிறார். அதோடு, ரித்திகாவின் கணவர் ஒரு தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்த வந்த இவர், திடீரென்று சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் விலகிய ரித்திகா:

அதனால் திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரித்திகா, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் பலருமே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதைத் தொடர்ந்து ரித்திகா தன் கணவருடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்தப் புகைப்படங்களுமே சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

ரித்திகா வளைகாப்பு:

மேலும் சமீபத்தில் தான், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்திகாவுக்கு வளைகாப்பும் நடந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தார்கள். ரித்திகாவின் வளைகாப்பு புகைப்படங்களும் வைரலான நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது குறித்து ரித்திகா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது ரித்திகா தமிழ் செல்வி ‘சட்டம் என் கையில்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

பாக்கியலட்சுமியில் இருந்து விலகியது ஏன்:

இந்தப் படத்தில் சதீஷ், வித்யா பிரதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் நேர்காணலில் கலந்து கொண்ட ரித்திகாவிடம் திருமணத்திற்கு பிறகு சீரியலில் விலகியதற்கு காரணம் கேட்கப்பட்டது. அப்போது அவர், திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க வேண்டும் என்று தான் இருந்தேன். என்னை யாரும் தடுக்கவும் இல்லை. ஆனால், என் உடல்நிலையில் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால்தான் நடிப்பை விட்டு விலகினேன். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நான் நடிக்க வருவேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement