எனக்கும் விஜய்யும் பிடிக்கும் அஜித்தும் புடிக்கும், ஆனா, இவர் பையனா நடிக்கனும்னு தான் ஆசை - நயனின் ரீல் மகன் ரித்து ராக்ஸ் .

By Ajju · 15/6/2022

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சமூக வலைதளத்தின் மூலம் பல்வேரு நபர்கள் ஒரே நைட்டில் பிரபலமடைநது விடுகின்றனர். அதிலும் குழந்தைகள் வீடியோ என்றால் அதற்கு ரீச் மிக விரைவில் கிடைத்துவிடும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாகி கொண்டுவருகிறது rithu rocks என்ற யூடுயூப் சேனல். 7 வயது குட்டிக் குழந்தை ரித்துவின் சமீபத்திய வீடியோ, தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்த `ரித்து ராக்ஸ்' (rithu rocks) யூடுயூப் பக்கம் ஆரம்பித்து சில மாதங்கள் ஆகிவிட்டது.

இதில் இதுவரை பல்வேரு வீடியோகளை பதிவிட்டாலும் சமீபத்தில் அந்த சிறுவர், செய்தி வாசிப்பாளராக கலக்கிய வேல்ராஜ் வீடியோ மூலம் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் குழந்தையாக மாற காரணமாக இருந்தது. இதை தொடர்ந்து இவரை தேடி பிடித்து பல யூடுயூப் சேனல்களும் பேட்டி எடுத்து இருந்தது. என்னதான் இவர்கள் வீடியோ பிரபலமானாலும் ஒரு குழந்தையை வைத்து 10 மணி நேரம் ஷூட்டிங் எடுப்பதா என்ற விமர்சனங்களும் எழுந்தது.

எழுந்த நெகட்டிவ் விமர்சனங்கள் :

இதுகுறித்து பேசிய ரித்துவின் பெற்றோர்கள் '' இந்த காணொளிகள் ரித்விக் விரும்பி கேட்டதால் மட்டுமே உருவாக்கினோம். ஒரு காணொளியை ஒரே நாளில் எடுப்பதில்லை. மூன்று நாள்கள் படப்பிடிப்பு நடைபெறும்.ஞாயிறு அன்று இரண்டு மணி நேரம் நான் கதை வசனம் எழுதுவேன். திங்கள் அன்று ரித்விக்கின் மூன்று மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், மதிய உணவுக்கு பிறகு ரித்விக் ஓய்வெடுப்பான்.மூன்று நாள்களின் மொத்த படப்பிடிப்பு நேரத்தைத்தான் நாங்கள் பத்து மணி நேரம் ஆகும் எனச் சொன்னோம்.

பெற்றோர்கள் கொடுத்த விளக்கம் :

இதை நாங்கள் ஊடகத்தில் சரியாக பதிவு செய்யவில்லை. சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் என்று கூறி இருந்தனர். யூடுயூப் வீடியோக்கள் மூலம் கிடைத்த பிரபலத்தால் தற்போது ரித்துவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது. அதுவும் முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் அவரின் மகனாக நடிக்கிறார் ரித்து. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து தற்போது நயன்தாரா அடுத்தடுத்து லீட் ரோலில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இந்த வீட்ட மறக்க முடியுமா ? விஜய் முதல் அஜித் வரை பல படங்களில் வந்துள்ள கைபுள்ளவின் சங்க கட்டிடம். (ப்பா, இத்தனை படங்களில் வந்து இருக்கா)

நயன்தாராவின் O2:

அந்த வகையில் தற்போது ஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் 'O2' என்ற படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் வருகிற 17ஆம் தேதி நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள ரித்து 'முதல் படத்திலேயே நயன்தாரா மேம்-முடன் நடித்தது ரொம்பவும் ஹேப்பியாக இருக்கு.

விஜய் மகனாக நடிக்க ஆசை :

யூட்யூப் வீடியோவுக்கு சின்ன கேமரா வச்சு எடுப்போம். இங்க பெரிய கேமரா வச்சு எடுத்தாங்க. நாங்க ரெண்டு லைட்டுதான் வச்சிருப்போம். படம் எடுக்கும்போது நிறைய லைட்ஸ் வச்சிருந்தாங்க. நான் விஜய் சார் ரசிகராக இருந்தாலும் அஜித் சாரையும் பிடிக்கும். அவருடைய வலிமை படம் சூப்பரா இருந்துச்சு. அஜித் சார் படத்துல வர்ற பைக் ஸ்டண்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். எனக்கு விஜய் சார் படத்துல அவர் பையனா நடிக்கணும் ஆசை என்று கூறியுள்ளார் ரித்து.

Tamil Behind Talkies AMP · Quick view
View full