இந்த வீட்ட மறக்க முடியுமா ? விஜய் முதல் அஜித் வரை பல படங்களில் வந்துள்ள கைபுள்ளவின் சங்க கட்டிடம். (ப்பா, இத்தனை படங்களில் வந்து இருக்கா)

0
333
Winner
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-127-1024x520.jpg

மேலும், ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த கதாபாத்திரங்களில் ஒன்று தான் கைப்புள்ள. வின்னர் படத்தில் கைப்புள்ள கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கித் தந்தது என்று சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படம் வின்னர்.

- Advertisement -

இந்த படத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக வடிவேல் உடைய நகைச்சுவையும் இருந்தது. மிகப் பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தில் வரும் வடிவேல் உடைய வீட்டை பலரும் பார்த்திருப்பீர்கள். இந்நிலையில் இவருடைய வீடு பல முன்னணி நடிகர்களின் படங்களின் வந்து இருக்கிறது. அதற்கான பட்டியல் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் ஆத்துப்பாறை மயிலாடுதுறை என்ற இடத்தில் தான் வின்னர் படத்தில் வந்த கைப்புள்ள வடிவேலுவின் சங்கம் இருக்கும் இடம் உள்ளது. ஆனால், உண்மையாகவே இது நெல் அறுவடை செய்யும் இடமாக உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் இடங்களில் எல்லாம் நிறைய சூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அதேபோல் இந்த வயல்வெளி, வீடு எல்லாம் ஏகப்பட்ட படங்களில் எடுத்து இருக்கிறார்கள்

-விளம்பரம்-

மாப்பிள்ளை:

சுராஜ் இயக்கத்தில் 2011இல் வெளியான படம் மாப்பிள்ளை. இந்த படத்தில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் ‘ரெடியா ரெடி ரெடியா’ என்ற பாடலுக்கு தனுஷ், ஹன்சிகா மோத்வானி இருவரும் நடனமாடி இருப்பார்கள். அதில் வரும் ஒரு காட்சி இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டது.

ஐ :

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் ஐ. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஒரு விளம்பர பாடல் வரும். அதில் விக்ரம், எமிஜாக்சன் நடித்து இருப்பார்கள். அந்த பாடலில் வரும் ஒரு காட்சி இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டது.

வேட்டைக்காரன்:

பாபுசிவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேட்டைக்காரன். இந்த படத்தில் விஜய், அனுஷ்கா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் கரிகாலன் காலப் போல என்ற பாடலில் வரும் ஒரு காட்சி இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டது

ஜனா

இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 2004இல் தல அஜித் நடித்த படம் ஜனா. இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் இந்த இடம் வருகிறது

கலகலப்பு

சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பக்கா காமெடி படம் கலகலப்பு. இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் விமல்-அஞ்சலி இந்த இடத்தில் நடனம் ஆடி இருப்பார்கள்.

அப்புச்சி கிராமம்

விஐ ஆனந்த் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வந்த படம் அப்புச்சி கிராமம். இந்த படத்தில் வரும் என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அந்த பாடலில் வரும் ஒரு காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டது.

This image has an empty alt attribute; its file name is 1-128.jpg

எல்கேஜி:

இயக்குனர் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த படம் எல்கேஜி. இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் இந்த இடம் இருக்கிறது.

அரண்மனை-2 :

சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 2 படம் 2016 ஆம் ஆண்டு வந்தது. இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஹன்சிகா நடனம் ஆடி இருக்கிறார். அந்த பாடலில் கைப்புள்ள வீடு காண்பிக்கப்பட்டு இருக்கும்

தமிழன்

தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தமிழன். இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் ஒரு காட்சியில் இந்த வீடு வரும்

This image has an empty alt attribute; its file name is 1-129-1024x438.jpg

ஆம்பள:

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த படம் ஆம்பள. இந்த படத்தில் வரும் ஓரு குடும்ப பாடல் இந்த இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆச்சு

மில்ட்ரி:

2013 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் மிலிட்டரி. இந்த ரம்பா நடித்து இருப்பார். இந்த படத்திலும் ஒரு காட்சியில் கைப்புள்ள வீடு வந்து இருக்கும்

வீராப்பு:

பத்ரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வந்த படம் வீராப்பு. இந்த படத்தில் சுந்தர் சி, கோபிகா, பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் கைப்புள்ள வீடு வந்து இருக்கும்.

குரு :

2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து தமிழில் டப் செய்யப்பட்ட படம் குரு. இந்த படத்தில் ஐஸ்வர்யா மழையில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதில் கைப்பிள்ளை வீடு மட்டுமில்லாமல் வயல் பக்கத்தில் இருக்கும் இடம் எல்லாமே காண்பிக்கப்பட்டு இருக்கும்.

இப்படி பல படங்களில் கைப்புள்ள வீடு, வயல் என அனைத்தும் இடம் பெற்று இருக்கும். இதில் வராத படங்களில் கைப்புள்ள வீடு இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement