விஜய் டிவி இல்லன்னா என்ன, வேறு சேனலில் புதிய தொடரில் கமிட் ஆன ரியா – ஹீரோ யார் தெரியுமா ?

0
526
riya
- Advertisement -

விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு ராஜா ராணி சீரியல் நடிகை தாவி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்க்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பாக செல்வதினால் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

-விளம்பரம்-

ராஜா ராணி சிரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் பெண் ஒருவர் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசையை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். ஆனால், இந்த ஆசைக்கு எதிராக கதாநாயகனின் தாய் இருக்கிறார். இந்நிலையில் இவரை மீறி தன்னுடைய கனவை கதாநாயகி நிறைவேற்றினாரா என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல்:

சுவாரசியமாக சென்று கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் தொடக்கத்தில் சந்தியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். ஆனால், ஆலியா மானசா கர்ப்பமாக இருத்தினால் சீரியலில் விலகிய நிலையில் நடிகை ரியா புதிய சந்தியாவாக நடித்து வந்தார். இவர் இந்நிலையில் ரியா சீரியலில் இருந்த எந்த காரணமும் ரியா விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

riya

சீரியலில் ரியா வெளியேற காரணம்:

இப்படி ஒரு நிலையில் ரியா, ஜீ தமிழில் ” என்ற புதிய தொடரில் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஜா ராணி சீரியல் நடிகை ரியா மாறியது குறித்து பலவிதமான கருத்துகள்பரவியது. மேலும், இந்த சீரியல் மூலம் ரியாவிற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது ஆனால் திடீரென்று இந்த சீரியலில் இருந்து ரியா வெளியேறிவிட்டார். இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

-விளம்பரம்-

ரியா நடிக்கும் புது சீரியல்:

இதற்கு ரியா பேட்டி ஒன்று நடித்திருந்தார். அதில் அவர், என்னுடைய முழு நேரமும் இந்த சீரியலில் போவதால் எனக்கான பர்சனல் நேரம் இல்லாமல் போகிறது. அதன் காரணமாகவே நான் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார். அதோடு சமீபத்தில் தான் இந்த ராஜா ராணி 2சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ரியா நடிக்கும் புது சீரியல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ரியா தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.

சண்டக்கோழி சீரியல்:

அந்த சீரியலுக்கு சண்டக்கோழி என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த சீரியலின் போட்டோ சூட் கூட சமீபத்தில் நடந்தது. இந்த சீரியலில் ரியாவுக்கு ஜோடியாக நியாஸ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது இந்த சீரியலுடைய ப்ரோமோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்த சீரியலுக்காக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

Advertisement