வெளிநாட்டில் படிச்சா பொண்ணு கெட்டவ, காபி போட்டு கொடுக்கும் பெண் நல்லவ – கல்லூரி மேடையில் பேசிய Rj பாலாஜி. வைரலாகும் வீடியோ.

0
331
RjBalaji
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களை ஆர் ஜே பாலாஜி விமர்சித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின் இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு பாலாஜி சென்னையில் உள்ள big-fm-ல் வேலைக்கு சேர்ந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is rj.jpg

இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார். இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார்.

இதையும் பாருங்க : இரண்டாம் குழந்தைக்கு பின் ஏறிய உடல், கடின உடற் பயிற்சி மூலம் மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு திரும்பியுள்ளார் சினேகா.

- Advertisement -

வீட்ல விசேஷம் படம் பற்றிய தகவல்:

அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’. இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்துள்ளார்.

படத்தின் ஒன் லைன் :

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து. உள்ளனர்.இந்தப் படத்தில் கல்யாண வயதில் ஒரு பையன் இருக்கும்போது திடீரென்று அம்மா கர்ப்பமாகிறாள். இதனால் வீட்டில் உள்ள பலரும் குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார்கள்.இது தான் படத்தின் கான்செப்ட். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-

பல்கலைகழகத்தில் நடந்த இசை வெளியீடு :

இந்த கல்லூரி குறித்து பாலாஜி பேசியபோது,இந்த கல்லூரிக்கு எப்போது வந்தாலும் நான் ஆச்சரியமாக பார்ப்பேன் என்றும் ஒரு டெஸ்க்கில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பையன் உட்கார்ந்து இருப்பார்கள் என்றும் இந்த சமநிலையை நான் வேற எந்த கல்லூரியிலும் பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே பெண்களிடம் பேச கூடாது என்று பொத்தி பொத்தி வளர்ப்பதால் தான் அவர்கள் வளர்ந்தவுடன் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை.

ரஜினி படங்களை விமர்சித்த ஆர் ஜே பாலாஜி :

நமது சினிமாவும் பெண்கள் குறித்து தவறான புரிதலையே காட்டிக் கொண்டிருக்கின்றனர்.’மன்னன்’ படத்தில் நன்றாக படித்து வேலை பார்த்து கம்பெனியை நிர்வாகம் செய்யும் விஜயசாந்தி கெட்டவள் என்றும் வீட்டில் அம்மாவுக்கு காபி போட்டுக்கொடுக்கும் குஷ்பு நல்லவர் என்றும் காட்டுவார்கள். அதேபோல் படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்ட ரம்யாகிருஷ்ணன் கெட்டவள், பாமர பெண் செளந்தர்யா நல்லவள் என்று காட்டி இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is image-102.png

ஆர் ஜே பாலாஜி பதிவிட்ட பதிவு:

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அப்போது நெட்டிசன் ஒருவர் ‘இப்படிப்பட்ட கதையை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என ட்வீட் செய்திருந்தார். இதை பார்த்த பாலாஜி கூறியிருப்பது, ஆமா, ஃபேமிலியில் ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story. ஆனால், ஹீரோ ரவுடி, டான், கொலைகாரன், திருடன், smugglerஆக நடித்தால் family subject படம் ! என குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement