உங்க 'மூக்குத்தி முருகன்' படம் சூப்பரா இருந்திச்சி, சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற Rj பாலாஜிக்கே சர்ப்ரைஸ் கொடுத்த பெண். அவரின் கலாயன பதில்.

By Rajkumar · 9/6/2022

விரைவில் வெளியாக இருக்கும் தன் படத்தை promotion செய்ய சுப நிகழ்ச்சிகளுக்கு அழையா விருந்தாளியாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். பின் இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி இருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1534888777256013826

இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.அதன் பின் எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார். வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டி இருந்தார் பாலாஜி.

இதையும் பாருங்க : பொதுவா இத பத்திலாம் ட்வீட் போட மாட்டேன், ஆனா உண்மையா இது பயங்கரம் இருந்துச்சு - பீஸ்ட் நாயகி ட்வீட்.

ஆர் ஜே பாலாஜி இயக்கிய படங்கள் :

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் பின் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார்.

வீட்ல விஷேசம் படம் :

இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.

வித்யாசமான promotion :

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் புரமோஷனை படு வித்தியாசமாக கையாண்டிருக்கும் ஆர்ஜே பாலாஜி, யாரென்றே தெரியாத நபர்களின் வீட்டு விசேஷங்களுக்கு சென்று வீட்ல விசேஷம் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.

மூக்குத்தி அம்மனை மூக்குத்தி முருகன் என்று சொன்ன பெண் :

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஆர்ஜே பாலாஜி அந்த தம்பதியை வாழ்த்து இருந்தார். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் உங்களின் மூக்குத்தி முருகன் படத்தை பார்த்தேன் மிகவும் அருமை என்று கூறியிருந்தார். இதனைக் கேட்ட ஆர்ஜே பாலாஜி 'மூக்குத்தி முருகன் விஜய் டிவியில் பாடுவார் நான் எடுத்த படம் மூக்குத்தி அம்மன் என்று மிகவும் கூலாக கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full