பொதுவா இத பத்திலாம் ட்வீட் போட மாட்டேன், ஆனா உண்மையா இது பயங்கரம் இருந்துச்சு – பீஸ்ட் நாயகி ட்வீட்.

0
342
- Advertisement -

விமான ஊழியர் மோசமாக நடந்து கொண்டதை குறித்து கோபத்தில் பூஜா ஹெக்டே பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படம் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தெலுங்கு திரையுலகிற்கு ஜம் பண்ணி விட்டார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற படம் மெகா ஹிட்டானது. சமீபத்தில் இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

பீஸ்ட் படம்:

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அதிலும் அரபிக்குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கொண்டாடப்பட்டு இருந்தது. பாடல், டான்ஸ் மூலமாகவே பூஜா ஹெக்டே பயங்கர பாப்புலராகி விட்டார் என்று சொல்லலாம். ஆனால், பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதற்கிடையில் பூஜா அவர்கள் பிரபாஸ் உடன் சேர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

பூஜா ஹெக்டே நடித்த படம்:

இந்த படமும் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் சிரஞ்சீவி, ராம் சரண் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பூஜா ஹெக்டே நடிக்கும் படம்:

தற்போது இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் பூஜா ஹெக்டே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பூஜா ஹெக்டே பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தான் எடுக்கும் புகைப்படம், வீடியோ என்று எதையாவது பதிவிட்டு வருவார். இந்த நிலையில் பூஜா ஹெக்டே ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

பூஜா ஹெக்டே போட்ட டீவ்ட்:

அதில் அவர் கூறியிருப்பது, மும்பையில் இருந்து புறப்படும் இன்டிகோ விமானத்தை சேர்ந்த Vipul Nakashe ஊழியர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டது வருத்தமளிக்கிறது. ரொம்ப திமிர் ஆகவும், அச்சுறுத்தும் வகையில் காரணமே இல்லாமல் என்னிடம் நடந்து கொண்டார். பொதுவாக இந்த பிரச்சினைகள் குறித்து நான் பதிவு போடுவது இல்லை. ஆனால், இது உண்மையில் பயங்கரமாக இருந்தது என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement