-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

Rj பாலாஜியா இது ? மனைவியின் பிறந்தநாளில் 20 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உருக்கம்.

0
2462
RJbalaji

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். ஆர் ஜே பாலாஜி குடும்பத்தை அவரது தந்தையார் கைவிட்டு இருந்தும் அவருடைய தாய் தான் எல்லாமுமாக இருந்து ஆர்ஜே பாலாஜியை ஆளாக்கினார். தன்னுடைய சிறு வயதில் மிக கஷ்டப்பட்டு கடுமையாக போராடி தான் இவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.

-விளம்பரம்-

இருந்தும் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் தான் இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் வாங்கினார். அதற்கு பிறகு கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.மேலும், இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக அதனுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு சென்னையில் உள்ள big-fm-ல் வேலைக்கு சேர்ந்தார்.

ஆர் ஜே To சினிமா :

இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார்.இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

View this post on Instagram
-விளம்பரம்-

A post shared by RJ Balaji (@irjbalaji)

ஆர் ஜே பாலாஜி திரை பயணம்;

மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார். வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டியுள்ளார் பாலாஜி. இந்த படத்தை பிரபு இயக்கினார். கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார்.இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மூக்குத்தி அம்மன் :

மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் மூலம் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார்.

ஆர் ஜே பாலாஜி குடும்பம் :

இறுதியாக வீட்ல விஷேஷம் படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் 20 வருடங்களுக்கு முன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 2003 முதல் 2030 வரை 20 வருடங்களாகிவிட்டது. நாம் இருவரும் பல தூரங்கள் கடந்துவந்தாலும் அதே பதின்வயதினராகவே இளமையோடு இன்னமும் இருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news